திடீர் திருப்பங்கள்
அமெரிக்க அரசியலில் இத்தனை நாடகத்தனமான மாற்றங்களை ஒரே தேர்தலில் பார்த்ததுண்டா? 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. வெறும் தேர்தல் முடிவுகளுக்காக மட்டுமல்ல, அதற்கு முன்னால் நடந்த நாடகங்களுக்காகவும்.
2024 ஜூலை மாதம் அமெரிக்க அரசியலில் யாரும் எதிர்பாராத ஓர் அறிவிப்பு வந்தது. அதிபர் ஜோ பைடன், தான் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிட மாட்டேன் என அறிவித்தார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அதுவரை பைடன் எல்லா பிரைமரி தேர்தல்களிலும் மக்களின் அசாதாரண ஆதரவைப் பெற்றிருந்தார். கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் ஜூன் மாதம் டிரம்புக்கு எதிரான முதல் அதிபர் விவாதம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
அந்த விவாதத்தில் 81 வயதான பைடன் குழறிப் பேசியதும், மறதி அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்ததும் ஜனநாயகக் கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்றிலிருந்து கட்சியின் மூத்த தலைவர்கள் – முக்கியமாக முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்டோர் – பைடன் மீது மறைமுக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். பட்டத்து யானை மாலை போட்டது போல அதிபர் பைடன் போட்டியில் இருந்து விலகிவிட, வாய்ப்பு கமலாவின் கைகளில் விழுந்தது.















Add Comment