‘பூவா தலையா போட்டால் தெரியும், நீயா நானா பார்த்துவிடு. பூ விழுந்தால் நீ நினைத்தபடி, தலை விழுந்தால் நான் கேட்டபடி’ எனப் பல்லாண்டுகளாக நடந்து வரும் அமெரிக்க – சீனாவின் பூவா தலையா அடுத்த கட்டத்திற்குச் சென்று இருக்கிறது. சான்ஃபாரன்ஸிஸ்கோவில் நடந்த விருந்து, சந்திப்பில் அப்படி ஒன்றும் உலகைப் புரட்டிப் போட்டுவிடக்கூடிய மாற்றம் ஏதும் நடந்துவிடவில்லை.
நான்சி பெலோசியின் தைவான் விஜயத்திற்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவத் தளவாடங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஹையாட்டில் நடந்த இரவு விருந்தில் ஆப்பிள் நிறுவனத் தலைவரும், ஹெட்ஜ் முதலீட்டுத் தலைவரும் மற்றும் பிளாக் ராக், இலான் மஸ்க் போன்றோரும் கலந்து கொண்டனர். செமி கண்டக்டர் உற்பத்திக்கான ஒப்பந்தம் கோரினார் சீன அதிபர்.
கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாக அயல்நாட்டு முதலீடு மிகவும் குறைந்துவிட்டதாகக் கவலை தெரிவித்தார் சீன அதிபர். மேலும் சீனா எப்போதுமே அந்நிய முதலீட்டில் ஆர்வம் காட்டுவதாகவும் அதை வரவேற்பதாகவும் கூறினார். இப்போதைக்கு இருக்கும் சீனப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த வேறு மார்க்கம் இருக்கிறதா என்ன..?
Add Comment