மக்களாட்சி நடக்கின்ற நாட்டில், தேர்தலில போட்டியிடும் தலைவர்களின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன பின்விளைவுகள் வரக்கூடும் என்பது அறிந்து, வாக்களிக்க வேண்டும். கட்சி சார்பில் அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் சேர்ந்து வாக்களிக்கும் போது அபாயகரமான கொள்கைப்பிடிப்பு உடைய ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம். மதச் சார்பு, தீவிர கொள்கைப்பிடிப்பு எதேச்சாதிகாரம் ஆகியவற்றில் பிடிமானம் இருக்குமானால் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இது அமெரிக்க மக்கள், மிக அதிக விலை கொடுத்துக் கற்றுக்கொண்டிருக்கின்ற ஒரு பாடம்.
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம், தனித்து இயங்குகிறது. அமெரிக்காவின் அரசாண்மை, வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் காங்கிரஸ் (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட அமைப்பு, உச்ச நீதிமன்றம் ஆகிய மூன்றால் நிர்வகிக்கப்படுகிறது)
Add Comment