47ஆவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். மக்கள் வாக்களித்துத் தீர்ப்பளித்து விட்டார்கள். ஜூரிகள் எழுதிய தீர்ப்புக்கு மேலாக இது பெருவாரியான மக்களின் தீர்ப்பு.
வாக்குரிமையில்லாதவர்கள் கூட வாக்களிக்கலாம், கடவுளே வந்து வாக்குகள் எண்ணினால்தான் நான் வெற்றிபெறுவேன் என்றெல்லாம் டிரம்ப்பே சொன்ன தேர்தலில்தான், அதிபராக டிரம்ப் ஆரவாரம் இல்லாமல் அமைதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பொய்களைப் பேசும், தீவிரப் பழமைவாத, சர்வாதிகார எண்ணம் கொண்ட ஒருவரைக் குற்றவாளி எனத் தெரிந்தும் மக்கள் தேர்ந்தெடுக்க என்ன காரணங்கள் இருக்க முடியும்?
ஆண் என்ற ஒரே காரணமா? இல்லை, துப்பாக்கிச்சூட்டில் இருந்து கடவுள் இவரைக் காப்பாற்றியிருக்கிறார், அதனால் நாட்டைக் காக்க வந்த தேவதூதன் என்ற நம்பிக்கையா? இல்லை, எதுவுமே இல்லை. மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள்.
Add Comment