Home » கடவுச் சீட்டுக் கசமுசாக்கள்
உலகம்

கடவுச் சீட்டுக் கசமுசாக்கள்

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களும் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தவர்களும் பலகோடிப் பேர். ஒபாமா, பைடன் அதிபர்களாக இருந்தபோதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பலர் வெளியேற்றப்பட்டனர். இந்தியா, கொலம்பியா, மெக்ஸிகோ போன்ற தாய்நாடுகளுக்குத் தனியார் விமானத்தில் அனுப்பப்பட்டனர். அவை ஊடகங்களின் கவனத்தைக் கவரவில்லை. காரணம் பயணிகளின் சுய மரியாதைக்கு மதிப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் காட்சிப்பொருளாக்கப்படவில்லை. கவனிப்புப் பிரியரான டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் நிலைமை வேறு. சட்டவிரோதக் குடிமக்கள் திரும்பி அனுப்பப்படும் போது குற்றவாளிகளாகக் கைகால்களில் சங்கிலிகளால் பிணைக்கப்படுகின்றனர். போர்விமானங்களில் அனுப்பப்படுகின்றனர். ஊடகங்கள் அதைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகின்றன. இந்தக் காட்சிகள், அமெரிக்காவின் குடிமக்கள், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் மனதில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றன.

சுற்றுலாப் பயணிகள் கடவுச்சீட்டு ( விசிட்டர் விசா): அமெரிக்கா வருவதற்கான கடவுச் சீட்டு என்பது அமெரிக்காவரை பயணம் செய்வதற்கான அனுமதி மட்டுமே. நுழைவாயிலில் மீண்டும் ஆவணங்களைச் சரி பார்க்கவும் சில சமயம் நேர்காணல் செய்யவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. அப்போது அவர்கள் திருப்தி அடையாவிட்டால் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம். அனுமதி தந்தால் எவ்வளவு காலம் தங்கலாம் என விவரங்கள் அடங்கிய அட்டை ஒன்றைத் தருவார்கள். இது காலங்காலமாக இருப்பதுதான். இதற்கு I94 என்று பெயர். அந்த அட்டையில் உள்ள காலம் வரைதான் ஒருவர் தங்க இயலும். தேவை ஏற்பட்டால் அதை கோரிக்கையின் அடிப்படையில் நீட்டிக்கவும் இயலும். I94 இப்போதெல்லாம் இணையத்தில் இருக்கிறது. காகிதத்தில் அச்சடித்துக் கொடுப்பதில்லை. பலர் அதில் உள்ள காலம் முடிந்தும் தங்கிவிடுகின்றனர். இது சட்டப்படி தவறுதான் என்றாலும் போர்க்கால குற்றவாளிகளாக நடத்தும் அளவுக்கல்ல. அவர்களையும் குற்றவாளிகளாக நடத்துகிறது தற்போதைய அமெரிக்க அரசு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!