நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை வென்று, முதன்முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நனவானது இந்த அணியின் கனவு மட்டுமல்ல, இந்த ஒரு நாளுக்காக முப்பத்து ஏழு வருடங்களாகக் காத்திருந்த ஒருவரின் கனவும் கூட. அவர்தான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார்.
‘கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய துர்ப்பாக்கியசாலி என்றுதான் என்னை அனைவரும் சொல்வார்கள். ஆனால் நான் அதுபோல ஒரு நாளும் நினைத்தது இல்லை. நான் விளையாட வந்தது இந்த விளையாட்டின் மீது இருந்த காதலால். பேட்டிங், ஃபீல்டிங், அல்லது கிரிக்கெட் தொடர்பான ஏதோ ஒன்றைச் செய்துகொண்டு, காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணிவரை மைதானத்தில் இருக்க வேண்டும். அதுதான் இன்று வரை என்னைச் செலுத்திக் கொண்டிருக்கிறது’ என்கிறார் மஜூம்தார்.
இவருக்கு அதிர்ஷ்டமில்லாதவர் எனப் பெயர் வரக் காரணம் என்ன? 1988இல் விளையாடத் தொடங்கிய இவரது சமகாலத்தவர்கள்தான் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, ரொமேஷ் பவார் போன்றோர். இந்திய கிரிக்கெட் அடையாளமாக சச்சின், சௌரவ், டிராவிட், லட்சுமண் என்ற நால்வர் அடைந்த உயரத்தை இவரால் ஏன் அடைய முடியவில்லை?














Add Comment