ஐஃபோன் என்றால் அதில் ஒரே இயங்குதளம் தான்: அது ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐ-ஓ-எஸ். இது ஒரு காப்புரிமை பெற்ற படைப்பு. வேறு எவரும் இதை வெளியிட முடியாது . ஆனால் ஆன்ட்ராய்ட் அப்படியில்லை. அது ஒரு திறன்மூலப் படைப்பு. அதனால் ஒவ்வொரு செல்பேசி உற்பத்தியாளரும் மூல ஆன்ட்ராய்ட் மென்பொருளைப் பிரதியெடுத்து அவர்களின் விருப்பத்திற்கு மாற்றி வெளியிட முடியும். அப்படித் தான் செய்கிறார்கள். இதனால்தான் சாம்சங் செல்பேசியினுள், ஒப்போ செல்பேசியினுள், ஒன்பிளஸ் செல்பேசியினுள் எல்லாம் இருப்பது ஆன்ட்ராய்ட் இயங்குதளம்தான் என்றாலும், ஒவ்வொன்றும் அங்கங்கே மாறுபடுகின்றன.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment