B டீம்
1984இல் மேக் வந்தது. ஜாப்ஸின் புகழ் புதிய உச்சத்தைத் தொட இது காரணமாக இருந்தது. அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மேக் குறித்த உரையாடல்கள், பேட்டிகள். தன்னாலான அனைத்தையுமே ஜாப்ஸ் செய்தார்.
மேக்கில் வரையும் சாஃப்ட்வேர் ஒன்று இருந்தது. மேக் பெயிண்ட். இன்றைய கிராஃபிக்ஸ் சாஃப்ட்வேர்களுடன் ஒப்பிட்டால் அது ஒன்றுமில்லைதான். ஆனால் அன்றைக்கு அது ஒரு புதிய முயற்சி.
ஓவியர்கள் சிலரை அழைத்து இந்த மேக் பெயிண்ட்டை ஜாப்ஸ் விளக்கிக்கொண்டிருந்தார். அதிலொருவர் ஆண்டி வார்ஹால். சில நிமிடங்கள் இதைப் பயன்படுத்தினார்.
இது வரையும் நுட்பத்தில் ஒரு புதிய திருப்பம். ஓவியத்தின் எதிர்காலத்தை மேக் பெயிண்ட் மாற்றியமைக்கும் எனப் புகழ்ந்தார். எவரேனும் மேக் கணினிகளை ஜாப்ஸ் முன்பு புகழ்ந்தால் போதும். அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.














Add Comment