நீயா? நானா?
வாஸ் அமைதியாக விலகிக்கொண்டார். ஜாப்ஸின் சிக்கல்கள் அதிகரித்தன. தினமொரு பிரச்சினை. சில தொழில்நுட்பம் சார்ந்தவை. பலவும் வியாபாரம் சார்ந்தவை.
எந்தவொரு நிறுவனத்திலும் இது நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனால் ஆப்பிளின் பிரச்சினைகள் ஜாப்ஸை மையமாகக் கொண்டவை.
ஆப்பிள் II கணினிகள் விற்ற அளவுக்குத் தொடக்கத்தில் மேக் விற்கவில்லை. நிறுவனத்தின் வருமானத்தில் பெரும்பங்கு ஆப்பிள் II கணினிகள் மூலமாகவே வந்தது.
மேக் கணினிகளின் குறைகளைத் தீர்க்கத் தனது குழுவினருடன் அயராது உழைத்துக்கொண்டிருந்தார் ஜாப்ஸ்.
ஜாப்ஸின் குறிக்கோள், பயனாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது. ஸ்கெல்லி உள்ளிட்டோரின் குறிக்கோள், நிறுவனத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பது. அதாவது லாபத்தை அதிகரிப்பது.
மேக் தொடர்பான இந்த விஷயத்தில் ஜாப்ஸுக்கும் ஸ்கெல்லிக்கும் உரசல்கள் தொடர்ந்தன. விலையை அதிகரிக்க வேண்டும் என்றார் ஸ்கெல்லி. ஜாப்ஸ் மறுத்தார்.














Add Comment