‘நீ ரொம்ப தூரம் போயிட்டியா ராம்?’என்று கேட்டால் அது ’96 திரைப்படத்தில் வரும் ஜானு.
‘நீ செத்து போயிட்டியா ராம்?’ என்று கேட்டால் அது சீனாவின் செயலி.
இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தவறாமல் நம்மிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது சீனாவின் Are You Dead? செயலி. மங்கலகரமான இந்தப் பெயரைச் சமீபத்தில் டெமுமு என மாற்றினார்கள். அதில் லாகின் செய்து நாம் பதிலளிக்காவிட்டால் அடுத்தது சங்குதான். நமது இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்யுமாறு அதுவே சொந்த பந்தங்களுக்கு அறிவித்துவிடும்.
மூன்று சீன இளைஞர்கள் இந்தச் செயலியைச் சென்ற வருடம் கண்டுபிடித்தார்கள் . நாட்டின் நிலையறிந்து அவர்கள் இதை உருவாக்கியிருந்ததால், பணம் கட்டிப் பதிவிறக்கம் செய்யும் செயலிகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தச் செயலி. காரணம், சீனாவில் தனிமையிலிருக்கும் நபர்களின் எண்ணிக்கை நூறு மில்லியன். சீனாவின் மக்கள் தொகையில் இது ஏறக்குறைய பத்து சதவீதம்.














Add Comment