பதினைந்து மில்லியன் பாகை செல்சியஸான அந்தப் பகுதியில் ஆரம்பமாகும் சக்திப் பொட்டலங்கள் அடுத்த பகுதியான கதிரியக்கப் பகுதியை அடைவதற்கு சில ஆயிரம் ஆண்டுகளாகும்.
Author - ரும்மான்
![]()
அறிவியலில் எந்த ஒன்றினையும் ஆரம்பிப்பதுதான் கடினமானது. அந்தக் கலை கைவசமாகிவிட்டால் தானாகப் பெருகி வியாபித்து, தனித்துறையாக வளர்ந்து விடும்.
ஃபங்கஸ் வெறுமனே மரங்களை இணைக்கும் வேலைக்காரர்களா, அல்லது, மரங்கள்தான் ஃபங்கஸுக்கு சேவகம் செய்யப் பிறந்தனவா? நிலத்துக்குக் கீழான அவர்களது உலகத்தை மேலே நின்று காக்கும் காவலாளிகள்தானா இந்த விருட்சங்கள்?
“நானும் அவனும் வாழ்வது முப்பது நிமிடத் தொலைவில். நான் சுதந்திரப் பிரஜை. அவனோ சிறைக்கைதி. எனக்கு வாக்குரிமை இருக்கிறது. அவனுக்கு எந்தவித உரிமையும் இல்லை. இந்த விழா முடிந்ததும் நான் இஸ்ரேலுக்குத் திரும்பிப் போவேன். அவனோ, ஆக்கிரமிக்கப்பட்ட காஸாவுக்குள் நுழைந்திடுவான்.” இஸ்ரேலிய திரைப்படக் கலைஞரான...
துணி துவைப்பதற்குப் போகும் நேரத்தை விட, சலவை இயந்திரத்தினுள் தொலைந்து போன ஒற்றைக் காலுறையைத் தேடுவதற்கு அதிக நேரம் செலவாகும். அது கடைசி வரை கிடைக்காமலே போகவும் வாய்ப்புண்டு. எதற்காக சாக்ஸையெல்லாம் மெஷினில் போட வேண்டும். கையால் அலசினால் கை தேய்ந்தா போய்விடும் என்பார்கள், பெரியவர்கள். ஆனால்...
திடீரென்று ஒருநாள், காலையில் எழுந்து பார்த்தால், கண் பார்வை முற்றாகப் போய்விடுமோ என்ற அச்சம் இந்த வருடம் கொஞ்சம் அதிகப்படியாகவே வந்து போனது. அநியாயம் சொல்லக்கூடாது, கண்களுக்கு அப்படி ஒரு வேலை வைத்த வருடம் இது. அடிப்படையில் விஞ்ஞான ஆசிரியராக இருப்பதால், எந்த ஒன்றுக்கும் மற்றவர்களை விட கூடுதலான பயம்...
கூட்டுவது பெருக்குவது சமைப்பது தொடக்கம், இருதய சத்திர சிகிச்சை வரை ரோபோக்களை வைத்து ஏராளமான காரியங்களைச் செய்துவிட்டது உலகம். எனினும் இவை அனைத்திலும் பார்க்கப் பிரமாண்டமான ஒரு பணியை, எதுவித மனிதத் தலையீடும் இன்றி, செய்து முடித்திருக்கின்றன சீன ரோபோக்கள். 158 கிமீ நீளமான ஒரு நெடுஞ்சாலையை, இந்த...
‘ஜெஜு தீவு’ உலகம் சுற்றும் வாலிபர்களின் பக்கட் லிஸ்டில் கண்டிப்பாக இடம்பெறும் ஓரிடம். சொர்க்கபுரி போன்ற அதன் காலநிலையும், எரிமலைகள் , நீர்வீழ்ச்சிகளும், ஏகப்பட்ட உயிரிகளும், நீந்தித் திரியும் ‘ கடல் பெண்களும்’ தீவின் முக்கிய அம்சங்கள். கொஞ்சம் பொறுங்கள். கடல் கன்னிகள் தெரியும். அதென்ன கடல் பெண்கள்...
ஒரு பெண்ணின் மூளையில் இந்தக் கணம் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று பகுதியளவேனும் அறிவது சாத்தியமற்றது. அதனால் குறைந்தபட்சம் பெண் ஈயின் மூளையையாவது புரிந்து கொள்ளலாமென்று புறப்பட்டார்களா தெரியாது. பயணம் வெற்றி பெற்று விட்டது. அறிவியல் வரலாற்றில் முதன் முறையாக, ஒரு முழு அங்கியின் மூளை, மொத்தமாக...
கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி ரவுண்ட் அப் கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு இது இருபத்தைந்தாவது ஆண்டு. வழமையை விடவும் அதிக ஜனத்திரளுடன். மிக அதிகம் பேசப்பட்ட ஒரு திருவிழாவாக இந்தப் புத்தக விழா மாற ஒரு காரணம் இருக்கிறது. ஒரு விழா ட்ரென்டாவது எப்படி? மிகப் பிரபலமான ஒருவர் அங்கே சர்வ...












