பொதுவாகச் சுற்றுலா சென்றோமென்றால் பின்னாளில் நினைத்து மகிழ ஆயிரம் நினைவுகள் சேகரமாகும். எனக்கு துருக்கிப் பயணம் அப்படித்தான் அமைந்தது. நகரத்தின் பழமை கண்களுக்கும் மனத்துக்கும் நிறைவைத் தந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் டமாஸ்கஸைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த உதுமானியர்கள்தான் அதற்குக் காரணம். தனித்தனி நாடுகளாக இன்று விளங்கும் ரோம், கிரேக்கம், ஸ்பெயின் எல்லாம் இவர்கள் ஆட்சியில் அடக்கம். அந்த மன்னர் பரம்பரையினர் கலை, ஆன்மீகம், இசை இவற்றைக் கொண்டாடியதைப் போன்றே உணவையும் கொண்டாடினார்கள்.
அவர்களில் குறிப்பிடப்பட வேண்டியவர் பதினாறாம் நூற்றாண்டில் ஆண்ட அரசர் சுலைமான். சமையற்கலைஞர்களுக்கு அவ்வப்போது போட்டிகள் நடத்துவார் சுல்தான். நாவில் நீர் ஊறவைக்கும், சுவையிலும் சிறந்த வஸ்து எதுவோ அதற்கு முதல் பரிசு. பரிசென்றால் பொற்கிழி போன்று எதுவும் இல்லை. ஒரு வண்டி நிறைய தங்க தினார்களை நிரப்பித் தருவார். கற்பனையிலும் நினைக்கவியலாத பரிசு.
சிறப்பு, அரபிகள் விருந்தில் அல்லது அன்பளிப்பில் இது இல்லாமல் இருக்காது. துபாயில் மிகச்சிறந்த பல கடைகளில் சுவையாக செய்கிறார்கள் ஆனால் விலை அதிகம் அதனால் எல்லோரும் வாங்க இயலாது.