விண்வெளியில் வல்லரசுகளின் ராணுவப் போட்டி அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்கா தனது விண்வெளிப். படையை வலுப்படுத்தி வருகிறது. விண்வெளியில் கட்டுப்பாட்டு ஆயுதங்களை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. தனது படைகளைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எனக் கூறுகிறது. அமெரிக்க விமானப்படைச் செயலாளர் ட்ராய் மீங்க், 2026 செப்டம்பர் 14 அன்று நடந்த ஒரு மாநாட்டில் இதை ஒப்புக்கொண்டார்.
விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதை அமெரிக்கா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை முடக்கும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. சிக்னல்களைத் தடுக்கும் அமைப்புகள் விண்வெளியில் இயங்கி வருகின்றன. லேசர் ஆயுதங்கள் மூலமாகவும் எதிரி அமைப்புகளை முடக்கலாம்.
அமெரிக்காவின் விண்வெளி ராணுவ முயற்சிகள் பனிப்போர் காலத்திலேயே ஆரம்பமாயின. இரண்டாம் உலகப்போருக்குப் பின் விண்வெளியின் சாத்தியங்களை அமெரிக்க விமானப்படை ஆராயத் தொடங்கியது. 1954இல் உலகின் முதல் ராணுவ விண்வெளி அமைப்பை உருவாக்கியது.















Add Comment