காலை எழுந்தவுடன் பேப்பர். இப்படியொரு தலைமுறை வாழ்ந்தது. சில செய்திகளை மேய்ந்துவிட்டு அவரவர் வேலைகளுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தனர்.
பின்னர் இந்தச் செய்தி டோஸ் அதிகரித்தது. வானொலி வழிச் செய்திகள், தொலைக்காட்சிச் செய்திகள் என்று அவ்வப்போது அழைப்பு மணிகள் அடித்தன.
இப்பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் இருபத்து நான்கு மணிநேரச் செய்தி சேனல்கள். வலைத்தளங்கள். ரீல்கள். இன்னபிற செய்தி அவதாரங்கள்.
இது நல்லதுதானே என்றால் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நல்லதல்ல.
செய்திகள் வெறுமனே விவரம் அறிந்துகொள்வதற்கல்ல. அவை நம்பிக்கையை மாற்றும் ஆயுதங்கள். அதன் மூலம் நம் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவல்லவை.















Add Comment