18. ஜின்னா V 2.0
ஒரு நாட்டின் வரலாற்றை அடியோடு திசை மாற்றிவிடும் காரணிகளாகச் சில அமைந்துவிடும். இந்தியா என்றல்ல. உலக நாடுகள் அனைத்துக்கும் இது பொது. ஒரு நபர். ஒரு தருணம். ஒரு சூழ்நிலை. எது காரணம், ஏன் அது காரணம் என்பதல்ல. நடந்துவிடும். அது மட்டும் நடக்காதிருந்தால் வரலாறு முற்றிலும் வேறொன்றாக எழுதப்பட்டிருக்கும் என்று எண்ணிப் பார்க்கும்தோறும் தோன்றும்.
ஜின்னாவைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். மிதவாத அணுகுமுறையில் தீவிரவாதியாகவும், இந்திய தேசியம் என்னும் கருத்தாக்கத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராகவும், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக முழு மூச்சாகப் பாடுபட்டவராகவும் இருந்த அம்மனிதர் எந்தப் புள்ளியில் பிரிவினையின்மீது பற்றுக் கொண்டார் என்று தேடத் தொடங்கினால், கிடைக்கும் விடைகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தாதவையாகவே பெரும்பாலும் இருக்கும்.
துருக்கியில் கலீஃபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து இந்திய முஸ்லிம்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கித் தீவிரமாகக் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது மகாத்மா காந்தி அவர்களை ஆதரித்தார். அது முஸ்லிம்களுக்கு மட்டுமான கவலை அல்லது அச்சம் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது; ஒட்டுமொத்த இந்தியாவும் அவர்களுடன் இருக்கிறது என்று உலகத்துக்குத் தெரியப்படுத்தும் விதமாக அமைந்தது அவரது நடவடிக்கை.
ஆனால் காந்தி கிலாபத் இயக்கத்தை ஆதரித்ததை ஜின்னா எதிர்த்தார். மதத்தை முன் வைத்த அரசியல் மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என்று சொன்னார்.















Add Comment