Home » கண்ணுக்குத் தெரியாத அபாயங்கள்
உலகம்

கண்ணுக்குத் தெரியாத அபாயங்கள்

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியபோது, யுத்தத்தில் என்னென்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பேசப்பட்டதை விட, கொரோனா உலகெங்கும் உயிர்களை வாரிச் சுருட்டியபோது, ‘இது சைனாவின் வூஹாங் மாகாணத்திலிருந்து கிளம்பிய உயிரி ஆயுதம்’ என்று பேசப்பட்டது அதிகம். இங்கு மட்டுமல்ல; உலகம் முழுதும்.

கண்ணுக்குத் தெரிந்த மாபெரும் ஆயுதங்கள் தராத அச்சத்தைக் கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி நமக்கு அளித்துவிட்டது. இது இயல்பாகப் பரவிய வைரஸா, இல்லை உண்மையிலேயே சைனா உற்பத்தி செய்த உயிரி ஆயுதமா? சர்ச்சைகள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.

இன்றைக்கு உலக நாடுகள் அஞ்சும் ஒரே பெரிய விஷயம் இதுதான். உயிரி ஆயுதங்கள். ஏனெனில், எந்த யுத்தத்திலும் எந்த நாடும் எப்போது வேண்டுமானாலும் இவற்றைப் பயன்படுத்தத் தொடங்கலாம். தேச எல்லைகள் மனிதர்களுக்குத்தான். கிருமிகளுக்கு அப்படி ஒன்று ஏது?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!