ஜெர்மனிக்கு வடக்கே, நார்வேக்குத் தெற்கே இருக்கும் ஒரு சிறிய நாடு, டென்மார்க். இங்கே, பத்தாம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த மன்னர் ஒருவரின் பெயர், ஹரால்ட் புளூடூத். இவர் அருகில் இருக்கும் தீவுகளுக்குச் செல்ல வசதியாகப் பல பாலங்களை அமைத்தார். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். இன்று நாம் பாடல் கேட்கப் பயன்படுத்தும் இயர்போன்களை நம் செல்பேசியோடு இணைக்கும் புளூடூத் தொழில் நுட்பத்தின் பெயர் இந்த மன்னரின் நினைவாக வைக்கப்பட்டதுதான். வைத்தவர் ஓர் இன்டெல் நிறுவன ஆய்வாளர். நம் ஊரில் மரம் நட்ட அசோகரை நினைவுகூர்வதில்லையா? அந்த மாதிரி அவர் பாலம் கட்டிய பரதேச மன்னரை நினைவுகூர்ந்து அவர் பெயரை வைத்திருக்கிறார்.
Add Comment