‘பதவி இருக்கும் போது மூளை இல்லை, மூளை வேலை செய்யத் தொடங்கும் போது பதவி இல்லை’ என்று பிரபல சிங்களப் பொன் மொழியோ, பித்தளை மொழியோ இருக்கிறது. அதாவது நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகள் எல்லாம் பின்னாளில் பெரும் உத்தமோத்தமர்களாக மாறி தேசநலன் , தேசிய நல்லிணக்கம் பற்றியெல்லாம் கருத்துச் சொல்வார்கள், புத்தகம் எழுதுவார்கள். ‘இவனல்லவோ மனிதன்’ என்று வெகுஜனம் அண்ணார்ந்து பார்க்கும்படி நடந்து கொள்வார்கள். பதவி இருந்த காலத்தில் அயோக்கியத்தனத்தில் ஆஸ்கார் அவார்ட் வாங்குமளவுக்கு இருந்து இருப்பார்கள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஒரு ஹேண்ட் பேக்கை மாற்றிக் கொண்டு இன்று அப்படித்தான் இருக்கிறார். இனப் பிரச்னையை ஊதிப் பெருப்பித்த பூதம் ஜே.ஆர் ஜெயவர்தன ஓய்வுகாலத்தில் ஒரு முனிவர் போல சாந்தமாய் இருந்தார். ஆனால் மகிந்த ராஜபக்சேவோ பெயரளவுக்காவது திருந்தி நல்லுபதேச மஞசரி நடத்தப் போவதில்லை. காரணம் அவரது அரசியலுக்கு ஓய்வு என்பதே கிடையாது. மீனைத் தூக்கித் தரையில் விடுவதைப் போன்ற ஒன்று- அரசியலை விட்டு மகிந்தவைப் பிரிப்பது. காரணம், நிரந்தரமாய் அரசியலில் இருப்பது என்பது அவரைப் பொறுத்தவரை சகலவிதமான விசாரணைகளிலிருந்தும் பாதுகாப்புப் பெறும் சர்வயோக நிவாரணி மாதிரி.
Add Comment