8. உதவியா? உபத்திரவமா?
அலுவலகம் ஒன்றில் ஓர் ஊழியர் பிசியாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அவரது மேலாளர் அவரிடம் வந்து “எனக்கு ஒரு ரிப்போர்ட் அவசரமாகத் தேவை அதனை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் செய்து தர முடியுமா?” என்று கேட்கிறார். “ஓகே சார்” என்று சொல்லி விட்டுத் தான் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு மேலாளர் கேட்ட அறிக்கை தயாரிப்பதில் அவ்வூழியர் கவனம் செலுத்துகிறார்.
அவர் மேலாளருக்கான அறிக்கையை முடித்த கையோடு அவரது சக ஊழியர் ஒருவர் வந்து “ஓர் உதவி செய்ய முடியுமா?” என்று வந்து கேட்கிறார்.
“என்னவென்று சொல்லுங்க. செய்கிறேன்” என்று பதிலளிக்கிறார்.
“இன்று முடிக்க வேண்டிய வேலை உள்ளது. ஆனால் நான் அவசரமாக வீட்டுக்குப் போக வேண்டிய ஒரு முக்கிய தேவை உள்ளது. முக்கால்வாசி முடித்து விட்டேன். ஆனால் முழுதாக முடிக்க நேரமில்லை. அதனை முடித்துக் கொடுக்க முடியுமா?” என்று பணிவன்புடன் கேட்கிறார்.
Add Comment