Home » சென்னைப் புத்தகக் காட்சி: கூடிக் கொண்டாடுவோம்!
புத்தகக் காட்சி

சென்னைப் புத்தகக் காட்சி: கூடிக் கொண்டாடுவோம்!

சென்னைப் புத்தகக் காட்சி 2025 – டிசம்பர் 2024ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது. முதல் புத்தகக் காட்சி தொடங்கிய ஆண்டு 1976. அண்ணாசாலையில் இருந்த மதரஸா-இ-ஆஸம் அரசுப் பள்ளியில்தான் நடைபெற்றது. அப்போது இடம்பிடித்த ஸ்டால்களின் எண்ணிக்கை வெறும் இருபத்து இரண்டு. அதிலும் வானதி, அருணோதயம் என இரண்டே இரண்டு தமிழ்ப் பதிப்பகங்கள்தான் அரங்குகள் அமைத்திருந்தன. மற்றவை எல்லாம் ஆங்கிலப் பதிப்பகங்கள். தமிழ்ப் பதிப்பகத்தினரை ஊக்குவிப்பதற்காகச் சில ஆண்டுகளுக்கு சலுகை விலையில் அரங்குகள் வழங்கப் பட்டிருக்கின்றன.

தற்போது தொள்ளாயிரம் அரங்குகளில், பெரும்பான்மையாகத் தமிழ்ப் பதிப்பகங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது சென்னைப் புத்தகக் காட்சி. காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் நடத்தப்பட்டு வந்த இந்நிகழ்வு, இடப்பற்றாக்குறை காரணமாக சில ஆண்டுகளுக்குப் பிறகு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது வருடாவருடம் வெளியூர்கள், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் லட்சக் கணக்கான மக்கள் ஆர்வமாக வந்து கலந்து கொள்ளும் திருவிழாவாக உருக்கொண்டு விட்டது. முதல் சில நாள்கள் புத்தகக் காட்சியில் சுற்றி வந்ததில் கண்ணில் பட்டதை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

புத்தகக் காட்சி வாயிலில் திருவள்ளுவர், பாரதியார், வ.உ.சிதம்பரனாரின் உருவச் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. புத்தகக் காட்சி வளாகத்தின் ஒன்பது நுழைவாயில்களுக்கும் பாரதியார், இளங்கோவடிகள், கம்பர், முத்தமிழறிஞர் கலைஞர் எனப் பெயர்களைச் சூட்டியிருக்கின்றனர்.

வழக்கம்போல நுழைவுக் கட்டணம் பத்து ரூபாய்தான். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கெல்லாம் அனுமதி இலவசம். உள்ளே ஏராளமான விளக்குகளும், மின்விசிறிகளும் முழுவீச்சில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. வெளியே தட்பவெட்பமும் இதமாக இருப்பதால் அத்தனைக் கூட்டத்திலும் அவ்வளவாக வியர்க்கவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!