ஸ்வீடனில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்ட்ரோட் என்ற வன்முறைக் கும்பலால் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் அந்தச் சிறுவர்கள். டேலன் எனப்படும் போட்டிக் கும்பலைச் சேர்ந்த ராப் பாடகர் ஒருவரைக் கொல்லும் வேலை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய கெட்ட நேரம், அந்த ராப் பாடகர் இவர்களைக் கண்டுபிடித்து விட்டார். டேலன் கும்பலால் அச்சிறுவர்கள் ஒரு காட்டுப்பகுதிக்குக் கடத்திச் செல்லப்பட்டனர். அங்கு லைட்டர்களால் சுடப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்டும் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்.
அதை வீடியோவாக எடுத்து, என்க்ரிப்ட் செய்யப்பட்ட செயலிகளின் வழியே பரப்பிவிட்டுக் கிளம்பிவிட்டனர். ஆனாலும் சிறுவர்களுக்கு ஆயுசு கெட்டி. எப்படியோ அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிக்குத் தட்டுத்தடுமாறிச் சென்று ஒரு வீட்டின் கதவைத் தட்டி, உதவி கேட்டுப் பிழைத்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் இச்சம்பவம் நடந்திருந்தால் குறைந்தது நான்கு நாள்களாவது பேசப்பட்டிருக்கும். சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் ஆளும் அரசிடம் காட்டமான கேள்விகளைத் தொடுத்திருக்கும். ஆனால், ஸ்வீடனில் இது இயல்பாக்கம் செய்யப்பட்ட ஒன்று. அவர்களுக்கு அது ஒரு செய்தி என்ற அளவிலேயே சுருங்கிவிட்டது.














Add Comment