இன்று பெரியவர்களைத் தாண்டி பத்து வயதுக் குழந்தைகளுக்கும் தனியாக ஒரு செல்பேசியைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்து வெளிவந்த ‘பகாசுரன்’ படம் வளர்ந்த பெண்களுக்கே செல்பேசியால் வரும் ஆபத்தை வெளிச்சம் போட்டாலும், குழந்தைகளுக்கு எதற்குச் செல் எனப் பட்டிமன்றம் நடத்தினாலும், அவர்களைத் தனிப்பயிற்சி முடிந்தவுடன் கூட்டிவர, வீட்டுப்பாடம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க, விளையாட என்று அதற்கு ஆயிரம் அத்தியாவசியக் காரணங்கள் வந்துவிட்டன. அப்படிக் கொடுக்கும் போது பெற்றோர் என்ன கவனிக்க வேண்டும் என்று பார்க்கலாம். அப்படிக் கொடுக்கும் போது என்ன மாதிரிச் செயலிகள் இருக்க வேண்டும், செல்பேசியை எந்தளவு கட்டுப்படுத்த வேண்டும், அவர்களின் பயன்பாட்டை எவ்வளவு கண்காணிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு பெற்றோருக்கும், அவர்கள் வாழும் சூழ்நிலை, வயது என்பதைப் பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்க.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
Add Comment