பலரும் அண்ணாந்து பார்க்கும் வண்ணம் உயர உயரப் பறந்துகொண்டிருந்த ஒரு வண்ணமயமான பலூன் கொஞ்சம் கொஞ்சமாகத் தரையில் இறங்கினால், ஒரு வித வருத்தமே ஏற்படும். எப்போதாவது அதீத பொருளாதார நெருக்கடியில் பலருக்குக் கடன் கொடுத்துவிட்டு, நமக்கே ஒரு நெருக்கடி வரும் போது அதைத் திரும்பக் கேட்க முடியாமலும் அவர்களாகக் கொடுத்துவிட மாட்டார்களா என்ற ஒரு பரிதவிப்பிலும் நாம் எப்போதாவது இருந்திருப்போம்தானே? அந்த நிலையில்தான் இப்போது சீனா இருக்கிறது.
சீனா மட்டும் அல்ல, பல பணக்கார நாடுகளும் தொற்று நோய்க்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர முடியாமல் இன்னும் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இப்போதுதான் விலைவாசியும் பணவீக்கமும் கட்டிற்குள் வந்திருக்கிறது அதுவும் மூன்று முறை வங்கியின் வட்டிவிகிதத்தை ஏற்றியபின்.
சீனாவின் இந்தப் பொருளாதார நெருக்கடியும் கடன் தொல்லைகளுக்கும் மூன்று காரணங்கள் உள்ளன.
Add Comment