மாலத்தீவின் ஜனாதிபதி முய்ஸு சீன அதிபரோடு கைகுலுக்கிய கையோடு இருபது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுவிட்டு வந்து சில தினங்கள்தான் இருக்கும். சியாங் யாங் ஹாங் 3 என்று பெயரிடப்பட்ட சீனக் கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளைய வந்துகொண்டிருந்தது. நிச்சயம் அது ராணுவக் கப்பல் இல்லை. சீன ஆராய்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான ஆராய்ச்சிக் கப்பல். ஆனால் அது வந்திருப்பது இந்தியப் பெருங்கடலை வேவு பார்ப்பதற்கு.
சீனாவின் சன்யா துறைமுகத்திலிருந்து ஜனவரி முதல் வாரத்தில் கிளம்பிய கப்பலை இந்தோனேசியக் கடலோரக் காவல் படை நிறுத்தி விசாரித்தது. ஜனவரி 11-ஆம் தேதி சுந்தா ஜலசந்தி பகுதியில் அதாவது ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில், அக்கப்பல் கிட்டத்தட்ட மூன்று முறை தன்னுடைய தானியங்கித் தகவல் கருவியை நிறுத்தி இயக்கியதுதான் இவர்களின் சந்தேகத்திற்குக் காரணம். அது குறித்த கேள்விகளுக்கு, நாங்கள் கருவியை நிறுத்தி இயக்கவில்லை அது பழுதாகியுள்ளது என்று சமாளித்திருக்கிறார்கள்.
Add Comment