ஆப்பிள் நகரம் என்றால் நியூயார்க்தான். உலகையே ஆட்டுவிக்கும் பங்குச் சந்தை அங்கேதான் இருக்கிறது. நியூயார்க் நகருக்கு அழகூட்டும் லண்டன்பிளேன் மரங்களிடையே ஜின்க்கோ (Ginko) மரங்கள் வேரூன்றினால் எப்படி இருக்கும்? அதுதான் இப்போது நடக்கிறது.
கட்டடங்களின் நகரமான நியூயார்க்கில் சீனா தனது செல்வாக்கை வானுயர வளர்க்கும் விதம் அதிர்ச்சியளிக்கிறது. சீனாவின் செல்வாக்கு இயந்திரம் உலகின் மிகவும் விரிவான, பயனுள்ள அமைப்புகளில் ஒன்று. அதுதான் பிரான்சில் நாடுகடத்தப்பட்டவர்களைத் துன்புறுத்தியது, பிரிட்டனில் கல்வியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது, கனடாவில் அரசியல்வாதிகளைக் குறிவைத்தது. இப்போது நியூயார்க்கில் தனது கவனத்தைக் குவித்திருக்கிறது.
குயின்ஸ்ஸில் உள்ள ஃப்ளஷிங், மன்ஹாட்டனில் உள்ள சைனா டவுன், புரூக்ளினில் உள்ள சன்செட் பார்க் ஆகிய மூன்று தனித்தனி பிரச்சார நிகழ்வுகளில், நியூயார்க் நகர மேயரான ஆடம்ஸின் ஆதரவாளர்களுக்குச் சிவப்பு கவர்களில் பணம் வழங்கப்பட்டது. நியூயார்க் டைம்ஸ் நிருபர்கள் இந்தக் காட்சியை நேரில் கண்டனர். இது வெறும் பரிசு அல்ல.
சீனக் கலாசாரத்தில் சிவப்பு கவர்கள் குழந்தைகளுக்குப் புத்தாண்டு பரிசாக அல்லது திருமண ஜோடிகளுக்குக் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் அறிமுகமில்லாதவர்களுக்குக் கொடுக்கப்படும்போது அது லஞ்சம் என்பதே உண்மை. சீனாவில் இது ‘பணம் கொடு, செய்தி எழுது’ என ஊடகவியலாளர்களுடன் அமைப்புகள் பழகும் வழக்கமான முறை.















Add Comment