அமெரிக்கக் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பலர் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் இருக்கிறார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேடை விவாதங்களும் நகரசபைக் கூட்டங்களுமாகத் தங்கள் கருத்துக்களை, கொள்கைகளை மக்கள்முன் வைக்கிறார்கள்.
இந்தியாவில் தேர்தல் நேரத்தில் பெரும்பாலும் பரப்புரைகளும் மாற்றுக் கட்சியினரைத் தாக்கி நடக்கும் உரைகள், பாடல்கள் இவற்றைக் கேட்டிருப்பீர்கள். இலவசங்கள், வாக்குறுதிகளும் அள்ளி விடப்படும். தேர்தல் அறிக்கைகளைக் கட்சி அலுவலகம் தேர்தலுக்குமுன் வெளியிடும். வேட்பாளர் பட்டியலையும் கட்சியே வெளியிடும் ஆனால் பிரதமர் வேட்பாளர் யாரென்று கட்சியே முடிவு செய்யும். ஆனால் இங்கே அதிபராகப் போட்டியிடப் போகிறவர்கள் ஊடகங்கள் ஏற்பாடு செய்யும் நகரசபை கூட்டங்கள் விவாத மேடைகளில் கொள்கை சார்ந்து விவாதிப்பார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் வேட்பாளருக்கு விடை அளிக்கக் குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்படும். அதன்பின் அவர்களுக்குக் கிடைக்கிற ஆதரவையும் எவ்வளவு நிதி நன்கொடையாகப் பெற முடிகிறது என்பதையும் பொறுத்து பலர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்வார்கள்.
Add Comment