கால்பந்து விளையாட்டின் போது மட்டுமே செய்திகளில் வரும் அர்ஜென்டினா, தற்போது அந்நாட்டு அதிபரின் சமூகவலைத்தளப் பதிவால் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது. அர்ஜென்டினாவின் அதிபரான ஜேவியர் மில்லே (ஸ்பானிஷ் மொழியில் ஹாபிய மில்லே என்று உச்சரிப்பார்கள்) சென்ற காதலர் தினத்தன்று அங்கே யாரும் அறியா கிரிப்டோ நாணயமான லிப்ராவை மெச்சி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டார். இந்தப் பதிவு சில நபர்களைக் கோடீஸ்வரர்களாக்கியது. பலரைத் திவாலாக்கியது. அது மட்டுமில்லாமல், அதிபரின் நாற்காலிக்கே வேட்டு வைத்துள்ளது.
“வலதுசாரி லிபரல் அர்ஜென்டினா வளரும்!! நாட்டின் பொருளாதாரத்தையும், சிறு தொழிலையும் மேம்படுத்த லிப்ரா கிரிப்டோ உதவும்.” என்று அந்த கிரிப்டோவை வாங்கும் லிங்கையும் பதிவு செய்தார் மில்லே.
அதிபர் ட்வீட் போடுவதற்கு முன் லிப்ராவின் மதிப்பு பூஜ்ஜியத்துக்கு நிகராக இருந்தது. ஒரு மணி நேரத்தில் அதன் விலை ஐந்து டாலராக உயர்ந்தது. ஒரு நாட்டின் அதிபரே விளம்பரம் செய்கிறார் என்பதால், பாமர இளைஞர்கள் லட்சக்கணக்கில் லிப்ரா நாணயத்தை வாங்கினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, லிப்ராவை உருவாக்கிய குழு லட்சக்கணக்கில் அதன் பங்கை விற்றார்கள்.
Add Comment