Home » இந்தத் திருடன் திருந்த மாட்டான்!
உலகம்

இந்தத் திருடன் திருந்த மாட்டான்!

வடகொரிய ராணுவத்தின் ஏவுகணை பட்டியலில் புதிதாக இணைந்திருப்பது ஹசாங்-20. தனது கட்சியின் எண்பதாவது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது இதை உலகுக்கு அர்ப்பணித்துள்ளார் வடகொரிய அதிபர் கிம். அதேசமயம், ஜப்பானின் SBI கிரிப்டோ எனும் பிரதான நிதி நிறுவனம், இருபத்தியொரு மில்லியன் டாலர்களை கிரிப்டோ திருட்டுக்குப் பறிகொடுத்துள்ளது.

செப்டம்பர் 24ஆம் தேதியன்று நடந்த திருட்டை யார் செய்தார்கள் என்பதே ஒரு வாரம் கழித்துத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. வடகொரிய அரசாங்கத்தின் ஆசிபெற்ற கிரிப்டோ திருட்டுக் குழுவான லாசரஸின் வேலை இது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சீனா, ரஷ்யா நாடுகளின் முக்கிய அதிகாரிகள் புடைசூழ, வடகொரிய அதிபரின் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. நண்பர்கள் ஒன்றுகூடுவது எதிரிகளைப் பதற்றமடையச் செய்கிறது என்றார் ரஷ்ய அதிகாரி மெத்வதேவ். உலகை உண்மையில் பதற்றமடையச் செய்திருப்பது வடகொரியாவின் கிரிப்டோ திருட்டுகளே. அணு ஆயுத வல்லரசாகத் தன்னை நிறுவப் பாடுபடும் வடகொரியாவின் பொருளாதாரத்துக்கு இந்த சைபர் குற்றங்களே முக்கிய நிதி ஆதாரங்களாகச் செயல்படுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!