எந்தப் பொருளை வாங்கும் முன்பும் வாடிக்கையாளர் மதிப்பீட்டைப் பார்ப்பது நம் வழக்கமாகிவிட்டது. ஆயிரக்கணக்கான மதிப்பீடுகளை படிக்கச் சோம்பலாக இருந்தால், ஏஐ சுருக்கித் தருவதையாவது படிக்கிறோம். பல நேரங்களில், அந்த மதிப்பீட்டை எழுதுவதே ஏஐ டூல்கள்தாம்.
வேட்டையாடியாக இருந்து பண்டமாற்று முறைக்கு மாறியபோது மற்றவர் பொருள்களை வாங்கி அனுபவிக்க மனித இனம் பழகியது. அந்த அனுபவத்திலிருந்து விமரிசனங்கள் பிறந்தன. காலப்போக்கில் அப்படிப் பகிரப்பட்ட விமரிசனங்கள் அல்லது வாடிக்கையாளர் மதிப்பீட்டால் (Customer Review) வளர்ந்த நிறுவனங்களும் உண்டு, வீழ்ந்த நிறுவனங்களும் உண்டு.
1975-ஆம் ஆண்டு பெப்சி (Pepsi) நிறுவனம் ஒரு ‘வாழ்வா சாவா’ வகை மார்க்கெட்டிங் உத்தியைக் கையிலெடுத்தது. கோகோ கோலா (Coca-Cola) நிறுவனம் தனித்துவமான பாட்டில் வடிவமைப்பு, பரந்த வினியோக வலையமைப்பு, தீவிர விளம்பரங்கள் என குளிர்பான உலகில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியிருந்த காலமது. இந்தத் தனித்துவமான அடையாளமே மக்கள் வேறு குளிர்பானங்கள் பக்கம் செல்லவிடாமல் தடுக்கிறது என்பதை பெப்சி உணர்ந்தது.















Add Comment