2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதித்த கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைச் செயல்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலம். எண்பத்தைந்து வயதான நோய்வாய்ப்பட்ட ஹெச்.பி.கரிபாசம்மாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கர்நாடகா அரசு. இதன் மூலம் கர்நாடகாவில் கண்ணியத்துடன் இறக்கும் உரிமை பெற்ற முதல் நபராகிறார் கரிபாசம்மா.
குணமடைய சாத்தியமில்லாத நோயாளிகளுக்கும் தாவர நிலையில் இருப்பவர்களுக்கும் (Vegetative state) கண்ணியத்துடன் இறக்கும் உரிமை வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். தாவர நிலை என்பது சிறிது நேரம் கண்களைத் திறந்து விழித்திருந்து உறங்கும் நேரத்துடன் கூடிய முழுமையான மயக்க நிலை. இது கோமாவிலிருந்து வேறுபட்டது. கோமா என்பது சுயநினைவை இழக்கும் நிலை.
கரிபாசம்மாவுக்கு கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ள உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியமான ஒன்று. இதற்கு முன்னர் இது போன்ற கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 1973ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார் அருணா சான்பாக். அவருக்குக் கீழ் பணிபுரிந்த ஒரு பணியாளரால் அவர் வன்புணர்ச்சி செய்யப்பட்டார். அந்தத் தாக்குதலில் அருணாவின் மூளையில் சில பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து முப்பத்தேழு ஆண்டுகள் கோமா நிலையில் இருந்தார்.
Add Comment