வீட்டிற்கு வீடு பலகாரங்களின் வாசம் வருகிறது என்றால் தீபாவளித் திருநாள் நெருங்கிவிட்டது என்று அர்த்தம். அந்த அளவுக்கு தீபாவளிப் பண்டிகையில் முக்கிய இடம் பிடித்திருப்பவை பலகாரங்கள்தாம். ஒருநாள் பண்டிகைதான் தீபாவளி. ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் என்னென்ன பலகாரங்கள் தயாரிக்க வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டு அதைத் தயாரிக்க ஆரம்பித்தும் விடுவார்கள்.
என்னதான் பல நவீன இனிப்பு வகைகள் சமீபகாலமாக தீபாவளிப் பட்சண வகைகளோடு இடம்பிடிக்க ஆரம்பித்து இருந்தாலும் பாரம்பரிய இனிப்பு வகைகளுக்கு இருக்கும் மதிப்பு இன்று வரை குறையவே இல்லை. தமிழ்நாட்டில் தீபாவளிக்குத் தீபாவளி தவறாமல் முதல் இடம் பிடிக்கும் இனிப்பு அதிரசம். இதைப் போலவே ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் பாரம்பரிய இனிப்பு வகைத் தீபாவளி பண்டிகையின் போது தவறாமல் இடம் பிடிக்கிறது. அப்படி ஒவ்வொரு மாநிலத்தவரும் செய்யும் இனிப்பு வகைகளின் பட்டியல். அதன் வரலாறு மற்றும் செய்முறைகள் இதோ உங்களுக்காக.
Add Comment