Home » வாழும் வதந்திகள்
சமூகம்

வாழும் வதந்திகள்

கடந்த வாரம் திரைப்பட நடிகர் தர்​மேந்​தி​ரா இறந்து போனதாக முன்னணிச் செய்திச் சானல்களிலும் இணையதளங்களிலும் தகவல் பரவியது. சில மணிநேரங்களிலேயே தர்மேந்திரா குடும்பத்தினர், அவர் குணமடைந்து வருவதாகவும், செய்தி நிறுவனங்கள் வதந்திகளைப் பரப்பக்கூடாது எனவும் கண்டனம் தெரிவித்தனர். தகவல் தொடர்பு பெருகியிருக்கும் இந்தக் காலத்திலும் இப்படி வதந்திகள் பரவுவது ஏன்? எப்போது வதந்தி என்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவது தொடங்கியது?

பெரு நிறுவனங்களில் கம்யூனிகேஷன் எக்ஸர்சைஸ் என்று ஒரு விளையாட்டு உண்டு. வரிசையாகப் பத்து பேரை நிற்க வைப்பார்கள். முதலில் நின்று கொண்டிருப்பவர் காதில் இரண்டு வாக்கியங்கள் கொண்ட செய்தி ஒரே ஒருமுறை மிக மெதுவாகச் சொல்லப்படும். அவர் அதனை உள்வாங்கிக்கொண்டு அடுத்தவர் காதில் மீண்டும் ரகசியமாகச் சொல்லவேண்டும். அடுத்தவர் அதையே மூன்றாமவர் காதில் சொல்வார்.

இப்படிப் பத்து பேரும் இந்தச் செய்தித் தொடரை நிறைவு செய்து முடித்தபின் முதலில் சொன்ன செய்தியும், கடைசியாகச் சொன்ன செய்தியும் பார்வையாளர்களுக்குப் பகிரப்படும். அந்த இரண்டும் ஒருபோதும் ஒன்றாக இராது. ஒவ்வொரு முறையும் ஏதேனும் கூட்டிக் குறைத்து, சேர்க்கப்பட்டு, நீக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, திரிக்கப்பட்டே வந்து சேரும். மொழித்தொடர்பு எத்தனை முக்கியம் என்பதை இதனை வைத்துக்கொண்டு மனிதவள மேம்பாட்டு அலுவலர் பாடம் நடத்துவார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!