என் கணவருக்கு வீஸிங் பிரச்னை உண்டு. எப்போதாவது கொஞ்சம் படுத்தும். அப்படி சமீபத்தில் ஒரு நாள் சுவாசப் பிரச்னை வரவே, மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தோம்.
அறைக்குள் நுழைந்ததும் என்னை முதலில் இருக்கையில் அமரச் சொன்னார் டாக்டர். கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டே ‘உங்கள் எடை கூடுதலாக இருப்பதுதான் எல்லா பிரச்னைக்கும் அடிப்படை’ என்று ஆரம்பித்தார்.
என் கணவர் திடுக்கிட்டுப் போனார். ஏனென்றால் அவரைவிட முப்பது கிலோ அதிக எடை கொண்டவளான நான் கிண்ணென்று இருக்கிறேன். ஈர்க்குச்சிக்கு ஜீன்ஸ் மாட்டினாற் போல இருக்கும் அவருக்கு எடை பிரச்னையா?
இல்லை. விவகாரம் வேறு. டாக்டர் என்னைப் பார்த்ததும் எனக்குத்தான் பிரச்னை இருக்க முடியும் என்று நினைத்துவிட்டார். கொஞ்சம் குண்டாக இருக்க விடுகிறதா இந்தச் சமூகம்? புருஷனுக்கு வீசிங் என்றாலும் நான் குண்டாக இருப்பதுதான் காரணம். புதின் படை எடுப்பதற்கும் நான் குண்டாக இருப்பதுதான் காரணம். கொடுமையடா சாமி.
எடை குறைகிறதோ இல்லையோ நகைச்சுவை குறைவில்லை!
விஸ்வநாதன்
சத்தமாக சிரிக்க வைத்த பதிவு..சபாஷ்
இப்படி சிரிக்க சிரிக்க எழுதுவதாலேயே… கொஞ்சம் எடை குறைந்தது போல இருக்கிறது மேடம். தொடர்ந்து எழுதுங்கள்… நாங்களும் தொடர்ந்து சிரிக்கறோம். போலவே… உங்களுக்கேற்ற டயட் செயலியையும் சொல்லவும்… (இந்திய தமிழக பெண்களுக்கென்று சோறு சாம்பார் ரசம் என்று டயட்டில் சொல்லப்பட்ட ஒரு செயலி…!)