Home » ‘டிங்கினானே!’
நகைச்சுவை

‘டிங்கினானே!’

உ.வே. சாமிநாதையர்


திருவாவடுதுறை யாதீனத்து மகா வித்துவானாக இருந்து புகழ்பெற்று விளங்கிய திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றி அறியாத தமிழறிஞர் இரார். பிள்ளையவர்கள் நூற்றுக்கணக்கான மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லியும், பல நூல்களை இயற்றியும் தமிழுலகத்துக்கு ஒப்பற்ற உதவி செய்திருக்கிறார்கள். அவர்களுடைய விரிவான வரலாறானது தனியே எழுதி வெளியிட்டுள்ள அவர்கள் சரித்திரத்தினால் நன்கு விளங்கும்.

அவர்களிடம் நான் பாடங் கேட்டுவந்த காலத்தில் சவேரிநாத பிள்ளை என்ற ஒரு கிறிஸ்தவரும் உடனிருந்து பாடம் கேட்டு வந்தார். அவர் பிள்ளையவர்களிடம் மிகுந்த அன்புடையவர்; பிள்ளையவர்களுடைய இறுதிக் காலம் வரையில் உடனிருந்து வந்தவர். பிற்காலத்தில் அவர் காரைக்காலில் தமிழ்ப் பண்டிதராக இருந்து புகழ் பெற்றார்.

பிள்ளையவர்கள் மாயூரத்திலே பல வருஷங்கள் இருந்தார்கள். அவர்களுடைய வீடு ஸ்ரீ மாயூரநாத ஸ்வாமி யாலயத்தின் தெற்கு வீதியில் இருந்தது. பிரதாப முதலியார் சரித்திரம், நீதி நூல் முதலியவற்றை இயற்றியவரான வேதநாயகம் பிள்ளை மாயூரத்தில் அப்போது முன்ஸீபாக இருந்தனர். பிள்ளையவர்களும் அவரும் அடிக்கடி சந்தித்துப் பழகுவதுண்டு. அக்காலத்தில் வேதநாயகம் பிள்ளை மாயூரத்திற்கு அருகிலுள்ள கூறைநாட்டில் சாலியன் சத்திரத்தில் இருந்து வந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!