எங்கள் குடும்பத்தில் அடுத்த மாதம் ஒரு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. அந்த விழாவைப் பற்றி என் அக்காவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது குடும்பத்தில் இதற்கடுத்து யாருடைய திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்ற அலசலில் இறங்கினோம். எனது ஒன்றுவிட்ட அக்கா மகள் ஒருத்தி பட்டியலில் இருக்கிறாள். கூடவே இன்னொரு ஒன்று அல்லது ஒன்றரை விட்ட அண்ணன் மகள் ஒருத்தியும் தயாராக நிற்கிறாள். அவர்கள் இருவருக்கும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டதாக எங்கள் வீட்டு கூகுள் ஒருவர் என் அக்காவிடம் தகவல் சொல்லி இருக்கிறார். மேற்படி இரு பெண்களுள் ஒருத்தி ஐடியில் வேலை பார்க்கிறாள். இன்னொருத்தி, கல்லூரிப் பேராசிரியர்.
சரி, அதனால் என்ன என்று கேட்கிறீர்களா? விஷயம் என்னவென்றால் இருவரும் அவர்களுக்கு வரும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு, சீரியல் ஹீரோக்களை உதாரணமாகக் காட்டி இருக்கிறார்கள்…
விவாகரத்து ஒன்று கோல்ட் வார் மற்றொன்று – இரண்டும் நிகழ வாய்ப்பு அதிகம்
விஸ்வநாதன்
இப்படி பெண்களின் ஆசையை தூண்டிவிட்டதில் சீரியலின் பங்கு அதிகம். ஆனால், நடப்பு வேறு.. கனவுலகம் வேறு.. ஆசைப்பட்டதில் சிறிதளவாவது பூர்த்தி செய்யும் மணமகன் அமையட்டும் இருவருக்கும்..