மத்திய அமெரிக்காவில் பசிபிக் பெருங்கடலை ஒட்டியிருக்கும் குட்டி நாடு எல் சால்வடோர். 2019ஆம் ஆண்டிலிருந்து அதன் அதிபராக இருப்பவர் நயீப் புகேலே (Nayib Bukele).
அண்மையில் அந்நாட்டின் அதிபர் பதவி குறித்த அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவர் இனி எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபராகப் பதவி வகிக்கலாம். இதுவரை இருமுறை மட்டுமே அந்நாட்டின் அதிபர் பதவியில் இருக்க முடியும். மேலும், தற்போது ஐந்து ஆண்டுகளாக இருக்கும் அதிபரின் பதவிக் காலம், இனிமேல் ஆறு ஆண்டுகளாக மாற்றப்படும். இன்னும் ஒருபடி மேலே போய், அதிபர் போட்டியிடும் ஒருவருக்கும் குறைந்தது ஐம்பது விழுக்காடு வாக்குகளாவது கிடைக்காவிட்டால் நடத்தப்பட வேண்டிய இரண்டாம் கட்ட தேர்தல் (run-off election) முறைக்கும் முடிவு கட்டப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், எல் சால்வடோரின் சர்வாதிகாரியாக நயீப் புகேலே கோலோச்சுவதற்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் வழிவகுத்துள்ளது. அங்கே மிகப் பெரும்பான்மையாக இருப்பது அவரால் தொடங்கப்பட்ட ‘புதிய சிந்தனைகள்’ (Nuevas Ideas) கட்சி உறுப்பினர்களே. தற்போது நடப்பது புகேலேவின் இரண்டாவது பதவிக் காலம். அது முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் இருந்தாலும், 2027ஆம் ஆண்டே புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.















Add Comment