Home » இல. கணேசன்: நான்கு முகம்
ஆளுமை

இல. கணேசன்: நான்கு முகம்

நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்துக்கொண்டிருந்த திரு.இல.கணேசன், 15-08-2025 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். தஞ்சாவூரில் பிறந்த இவர், எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லாத நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் குடும்பத்தின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவது குழந்தையாக 16-02-1945 அன்று பிறந்தார்.

இது போன்ற எளிமையான பின்னணியில் இருந்து வந்து, பாரதிய ஜனதா கட்சியில் தேசிய அளவிலும், தமிழகத்திலும் பல்வேறு முக்கியமான கட்சிப் பொறுப்புகள், மாநிலங்களவை உறுப்பினர் பதவி என படிப்படியாக இவர் உயர்ந்த விதம் வியக்கத்தக்கது. கடைசியாக நாகாலாந்து மாநில ஆளுநர் பதவியில் இருந்தார். அதற்கு முன்பாக மணிப்பூர் ஆளுநர், மேற்குவங்கத்தின் பொறுப்பு ஆளுநர் என ஒரேசமயத்தில் இரண்டு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருந்த சிறப்பும் இவருக்கு உண்டு.

இல.கணேசனின் அரசியல் வாழ்க்கையை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியர், பாரதிய ஜனதாக் கட்சியின் நம்பிக்கைக்குரிய முக்கியப் பிரமுகர், மாநில ஆளுநர் என மூன்றாகப் பிரிக்கலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!