தேர்தல் பத்திரங்கள் (Electoral Bond) தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் சட்டத்திற்குப் புறம்பானதெனவும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே எதிரானதெனவும் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான இந்த அமர்வு அளித்திருக்கும் தீர்ப்பு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.விற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கும் வாதம்.
அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் செலவுகளுக்கான நிதியைத் தனி நபர் மூலமாகவோ அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ பெற்றுக்கொள்ள 2017-ஆம் ஆண்டு வழிசெய்து கொடுத்தது பாஜக அரசு. விஷயம் அதுவல்ல. அதற்கு முன்னரும் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்க வாய்ப்புகள் இருந்தன. அப்படிக் கொடுத்த ஏராளமான நிறுவனங்களின் பெயர்கள் இப்போதும் பொதுவெளியில் இருக்கின்றன. ஆனால் இப்போது இருக்கும் நடைமுறைக்கும் அவற்றிற்கும் பெரிய வேறுபாடு ஒன்றிருக்கிறது. அதற்குப் பெயர் வெளிப்படைத்தன்மை. எதைச் செய்தாலும் மூடி வைத்துச் செய்வோம் என்பது மோடி அரசின் கொள்கைகளில் பிரதானமாக இருப்பதுதான் இதில் இருக்கும் பெரிய சிக்கல்.
2017-2018-ஆம் நிதி ஆண்டில் தேர்தல் பத்திரத் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இது 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
Add Comment