செங்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய நாடு எரிட்ரியா. யாருக்கும் அதிகம் பரிச்சயமில்லாத இந்நாடு “ஆப்பிரிக்காவின் வடகொரியா” என அழைக்கப்படுகிறது. இணையம், ஏ.டி.எம் என்பது எல்லாம் அங்குள்ள மக்களுக்கு ஒரு கனவு. 3ஜி, 4ஜி, 5ஜி என்று எந்த ஜியும் அங்கு இல்லை.
இன்றைய எரிட்ரியாவின் நிலையைப் புரிந்து கொள்ள அதன் வரலாறைத் தெரிந்து கொள்வது அவசியம். இந்நாடு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இத்தாலிய குடியேற்றமாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் வந்தது. 1952இல், ஐக்கிய நாடுகள் சபை எரிட்ரியாவை எத்தியோப்பியாவுடன் கூட்டாட்சியாக இணைத்தது. ஆனால் எத்தியோப்பியா விரைவில் கூட்டாட்சி அமைப்பை மீறி, எரிட்ரியாவைத் தனது மாகாணமாக அறிவித்தது. இந்தப் போக்கு, முப்பது ஆண்டுக்கால விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டது.
1991இல், எரிட்ரிய மக்கள் விடுதலை முன்னணி (EPLF) தலைவரான இசையாஸ் அஃவெர்கியின் தலைமையில் போராளிகள் வெற்றி பெற்றனர். 1993இல் வாக்கெடுப்பின் மூலம், எரிட்ரியா அதிகாரப்பூர்வமாகச் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் காரணமாக இசையாஸ் ஒரு தேசிய நாயகனாக பார்க்கப்பட்டார். மக்கள் நம்பிக்கையுடன் புதிய தொடக்கத்தை எதிர்பார்த்தனர்.
Add Comment