தற்போது நடந்து வரும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வேண்டிய மாணவர்களின் வருகை குறைந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2023-ம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. எட்டு லட்சத்து ஐம்பத்தோராயிரம் மாணவர்கள் தேர்வெழுத இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
இதைப் படித்தீர்களா?
1 மிதப்பு எக்மோர் ஸ்டேஷனின் பிரதான வாயில் எதிரில் சவாரியை இறக்கிவிட்டுக் கிளம்பப் பார்த்த டிரைவரிடம், இடதுகாலைத் தார் ரோட்டிலும் வலதுகாலைப் பெடலிலும்...
நடிகர் அஜித் கலந்துகொண்ட துபாய் கார் ரேஸ் குறித்து நாம் அறிவோம். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அதே துபாயில் சரித்திர முக்கியத்துவம் கொண்ட வேறொரு சம்பவம்...
EMIS மூலமாக தினமும் வருகைப் பதிவு மாநில அளவில் அன்றைக்கு அன்றே பதிவிடப்படுகிறது. ஒரு மாத தரவுகளை சோதித்துப் பார்த்து, கல்வித்துறையும் சுற்றறிக்கைகள் அனுப்பிய வண்ணம் இருந்தது. ஆனால் மாணவர்களை தொடர்பு கொண்டு பேசிய போதும் வரவழைக்க இயலவில்லை. அவன் வரவில்லை நான் என்ன செய்வது என்பதே பெற்றோரின் பதில்.
மேலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கல்வியே பொருள்தாராத்திற்கான ஆதாரமாக இருந்தது. சென்ற பத்தாண்டுகளில் முன்பே பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் படிப்பிற்கு சம்பந்தமில்லாத சில எளிய தொழில்களை செய்கின்றனர். எனவே, படிப்பதனால் வரக்கூடிய பயன் என்ன என்பது குறித்து மாணவன் கேட்டால் நம்மிடம் உள்ள பதில் என்ன?
தற்போதைய கல்வி முறை தன்னுடைய ஈர்ப்பை இழந்து வருகிறது. இதுவே முதன்மை பிரச்சனை. முன்னொரு காலத்தில் பொருளாதாரத்திற்கு பாதையாக இருந்து மாணவர்களை ஈர்த்து வந்தது. தற்போது அந்நிலை இல்லை.
இதை சரி செய்வது தான் தலையாயப் பிரச்சனை. முழுமையாக கல்விக் கொள்கையை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்போது இல்லை என்றாலும் எப்போதாவது இது புரிந்து கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.