அரசு வேலை என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. சில ஆயிரம் வேலைகளுக்குப் பல லட்சம் பேர் தேர்வு எழுதுவதால் இதில் வெற்றி பெறுவது எளிதான காரியமன்று. சரியான திட்டமிடல், தொடர் பயிற்சி, தேர்வு தவிர வேறு சிந்தனையன்றி உழைத்தால் பலனுண்டு. தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க வேண்டும். வீட்டில் தினமும் குறைந்தது ஐந்து மணி நேரமாவது படிக்கவேண்டும். கவனச் சிதறல் கூடாது. வரவேற்பறை, படுக்கையறையில் உட்கார்ந்து படித்தால் நெருக்கடிகளான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே, வீட்டிலேயே ஒரு படிக்கும் அறையையும் அதில் சிறிய அளவில் நூலகம் ஒன்றையும் அமைத்துக் கொள்ளுதல் சிறப்பு.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















Add Comment