Home » ஃப்ளாப்பி எனும் ஜப்பானிய வேதாளம்
அறிவியல்-தொழில்நுட்பம்

ஃப்ளாப்பி எனும் ஜப்பானிய வேதாளம்

’ஸ்மூத்தாய் செல்லும் ஃப்ளாப்பி டிஸ்க் அவள்’ என்று தொண்ணூறுகளின் இறுதியில் தமிழ்க் கவிஞர்கள் பெண்ணை வர்ணிக்கும் உவமை வரையில், ஃப்ளாப்பி டிஸ்க் என்கிற நெகிழ்வட்டுகள் பிரபலமாக இருந்தன. சிடி தோன்றி, யு.எஸ்.பி.க்கள் (Compact Disc – CD , USB – Universal Serial Bus) தோன்றாத அந்தக் கணினிக் கற்காலத்தில் ஃப்ளாப்பி டிஸ்க்குகள் பயன்பாட்டுக்கு எளியதாகவும், தரவு மாற்றத்திற்கான வெகுஎளிய கருவியாகவும் இருந்தன. அதன் அதிகபட்சக் கொள்ளளவே 1.44 MB (மெகா பைட்) என்றால் சில ஜிகாபைட்டுகள் தரவுகளை கையிடுக்கில் வைத்து எடுத்துச்செல்லும் இந்தத் தலைமுறை அதிசயித்துப் போகும்.

1970​-களில் ஃப்ளாப்பி டிஸ்க் பயன்பாட்டுக்கு வந்தன. கணினிகளை நெட்வொர்க்குகள் வழியாக இணைக்க முடியாத அந்தக் காலகட்டத்தில், ஃபளாப்பி வட்டுகள் வழியாகத்தான் ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குத் தரவுகளை ஏற்ற, மாற்ற முடிந்திருக்கிறது. மிகவும் உபயோகமான, அத்தியாவசியமான காரணியாகவும் இருந்திருக்கின்றன. பிறகு கணினி இணைப்புகள் பிரபலமாகி, இணையம் பரவலானபோது அதன் பயன்பாடு மெள்ள மெள்ள மறைந்து பின்னர் காணாமலே போனது.

இந்தியாவைப் பொறுத்தவரை, கணினிக் கற்காலத்தில் தோன்றி, அப்போதே மறைந்துவிட்ட வஸ்து அது. ஈராயிரத்திற்குப் பிறகு கணினியை உபயோகிக்கத் தொடங்கியவர்கள் பலர் அதற்குப் பிறகு காம்பாக்ட் டிஸ்க், யூ.எஸ்.பி., எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க், மெமரி கார்ட் (CD, USB, External Hard Disk, Memory Card) என்று பல படிகள் ஏறி வந்துவிட்டனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!