நல்லதோர் உணவகம் எப்படி இருக்க வேண்டும்..? உதாரணம் காட்ட வேண்டுமெனில் அமெரிக்காவில் இயங்கிவரும் சிக்பில்-ஏ (Chick-Fil-A) தொடர் உணவகங்களைச் சுட்டலாம். குறைவான விலையின் காரணமாய் எல்லாரும் மெக்டொனால்டில் வரிசையில் நின்றாலும்கூட ‘எவ்வளவு நேரமானாலும் சரி… இங்குதான் சாப்பிடுவேன்’ என்று வரிசை கட்டிக் காத்திருக்கும உணவு ரசிகர்களைப் பெற்றிருக்கிறது சிக்-பில்-A.
அப்படிக் காத்திருந்து சாப்பிடுமளவுக்கு என்ன சிறப்பு இந்த உணவகத்தில்..? அதைப் பார்ப்பதற்குமுன் உணவகத்தின் வெற்றிக் கதையைத் தெரிந்து கொண்டால் மற்றவை தானாகவே புரிந்துவிடும்.
இதை நிறுவிய சாமுவேல் ட்ரூட் கேத்தி மார்ச் 14, 1921 அன்று ஜார்ஜியாவில் பிறந்தவர். அவரது பெற்றோர் ஒரு சிறு உணவகத்தை நடத்தி வந்தனர். கேத்தி அங்கேயே வேலை செய்து தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். இரண்டாம் உலகப் போரின் சமயம், இராணுவத்தில் மெஸ் சார்ஜெண்டாகப் பணிபுரிந்தார். சர்வீஸிலிருந்து விலகியபின், 1946-ஆம் ஆண்டில் தன் சகோதரர் பென்னுடன் இணைந்து ஜார்ஜியாவில் ஒரு க்ரில்லைத் திறந்தனர். பிறகு இது சிக்பில்-ஏ உணவகமாக மாற்றம் பெற்றது.
Add Comment