ஃபிரான்ஸிலிருந்து சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்குப் பணியாற்றிய இரு பெண்களின் வழக்கு விசாரணை நிறைவுற்று, கடந்த டிசம்பர் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின்படி, லூசி சி என்பவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கரோல் சன் என்பவருக்குப் பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தது ஃபிரான்ஸ் சிறப்புக் குற்றவியல் நீதிமன்றம்.
ஈராக்கில் அல் கொய்தாவின் கிளை இயக்கமாக உருவெடுத்த ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், பின்னர் சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரைப் பயன்படுத்தி அந்நாட்டிலும் பரவித் தனது பலத்தை அதிகரித்துக் கொண்டது. சிரியாவில் ரக்கா போன்ற நகரங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
2014ஆம் ஆண்டு ஈராக்கில் மொசூல் நகரைக் கைப்பற்றியது. அதன் பின் இவ்வியக்கம் தன்னை ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (Islamic State of Iraq and Syria) ISIS என்று பிரகடனப்படுத்திக் கொண்டு தன்னை ‘காலிஃபேட்’ என்று அறிவித்தது. அதற்கு ‘உலகளாவிய இஸ்லாமிய அரசின் தலைமை’ என்பது பொருள். தன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் கடுமையான இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஈராக் போரினால் உருவான அல் கொய்தாவின் கிளை, தனக்கென ஒரு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றி உலகளாவிய ஒரு பயங்கரவாத இயக்கமாக வளர்ந்தது.















Add Comment