நாட் ஃபேர் பட் லவ்லி
‘சில வருடங்களுக்கு முன், பெங்களூரு ஏர்போர்ட்டில் ஒரு புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. தலைப்பு – சிறு வயதுக்குத் திரும்புதல். அங்கே இருந்தவர்களுக்கெல்லாம் இலவசமாக கலரிங் பேப்பரும் கிரேயானும் கொடுத்தனர். நான் கிரேயானைப் பயன்படுத்திப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது. நிஜமாகவே சிறு வயது நினைவுகள் வந்ததால் ஆர்வமாகப் போனேன்.
படத்தில் மனித உடலுக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தபோது விநோதமான ஒன்றைக் கவனித்தேன். அந்த கிரேயான் என்னுடைய தோல் நிறத்தில் இல்லை. நான் தினமும் பார்க்கும் எவர் நிறம் போலவும் இல்லை. ஆனாலும் அதன் லேபிளில் ஸ்கின் என்றுதான் எழுதியிருந்தது.
அந்த கிரேயான் பாக்கெட்டிலேயே பிரவுன் கலர் இருந்த போதும் நான் அதைப் பயன்படுத்தவில்லை. பீச் நிறத்தைக் கொண்டே முழுதாக வண்ணம் தீட்டினேன்.
எது என்னைத் தடுத்தது? பழுப்பு என்பது மனித உடலுக்கான சரியான நிறம் இல்லை. ஆரஞ்சும், பிங்க்கும் கலந்த வண்ணம்தான் தோலுக்கானது என என் மூளையில் யார் பதிய வைத்தது?
இந்த ஒரு கேள்விதான் சமூகத்தின் பொதுப் புத்தி மீதான சந்தேகத்தை எழுப்பியது’ என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த சிராயு ஜெயின். இவர் அப்சரா, நட்ராஜ் பென்சில்களைத் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் பென்சில்ஸ் நிறுவனத்தின் மேல் 2013ஆம் ஆண்டில் ஒரு வழக்கு தொடுத்தார். அப்போது அவருக்குப் பத்தொன்பது வயதுதான், சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தார்.















Add Comment