Home » Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 6
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 6

என் மூக்கு, என் உரிமை

ஒரு பியூட்டி பார்லரில்.

‘பின்னாடி நல்லாருக்கா… ஒன்னும் வித்தியாசமா தெரியலையே?’

கேட்ட பெண்மணிக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும். பியூட்டி பார்லருக்குப் புருவம் திருத்துவதற்காகப் போயிருந்தேன். அப்போதுதான் அவருக்கு முடி வெட்டி முடித்திருந்தனர். பின்னால் அமர்ந்திருந்த என்னைக் கண்ணாடியில் பார்த்துக் கேட்டார்.

பாப் கட்டுக்கும் குறைவாக, கிராப்புக்குச் சற்றுக் கூடுதலாக முடி வெட்டியிருந்தனர்.

‘கையைத் தூக்கிக் கொண்டை போட முடியல. ஜடை போடவும் கஷ்டமாயிருக்கு. வெட்டிரலாம்னு சொல்லிட்டே இருந்தாங்க. ஒரு வருஷமா தள்ளிப் போட்டுப் போட்டு இன்னிக்குத்தான் பார்லருக்கு வந்திருக்காங்க.’ அருகில் அமர்ந்திருந்த அவரது மகள் சொன்னார்.

முன்பக்கம் பார்த்தால் முடி வெட்டியிருப்பதே தெரியவில்லை. வகிடு பிரித்துப் பின்னல் போட்டிருப்பது போலவே திறமையாக வெட்டியிருந்தனர். இருந்தாலும் அந்த அம்மா ‘ரொம்ப கம்மியா வெட்டலையே… நல்லாத்தானே இருக்கு?’ என ஒவ்வொருவரையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!