ஆங்க்ஸைட்டி ஆடிட்
‘என்னாச்சு ப்ரோ? யு லுக் ஸ்ட்ரெஸ்ஸி…’, லேப்டாப்பின் முன் தலையில் கைவைத்து அமர்ந்திருந்த அறைத் தோழி ஆத்யாவைப் பார்த்துக் கேட்டாள் சாரா.
‘சரி ஓகே… ஆக்ங்ஸைட்டி ஆடிட் பண்ணுவோமா? காலைலேர்ந்து என்னென்ன பண்ண… ஒன்னொண்ணா சொல்லு ப்ரோ’, காவ்யாவும் துணைக்கு வந்தாள்.
உடனே லேப்டாப்பில் தனது ‘மென்டி பி’ கூகுள் டாக்ஸைத் திறந்தாள் ஆத்யா.
‘எழுந்த உடனே பேங்க் பேலன்ஸ் செக் பண்ணினேன். தப்பு நம்பர் ஒன். பிரியா, புரமோஷன் கிடைச்சதை ஸ்டோரியா போட்டிருந்தா. அதைப் பார்க்கப் போய், லிங்க்டின் ராபிட் ஹோலுக்குள்ள விழுந்துட்டேன். அப்றம் அம்மா ஃபோன் பண்ணி, எப்படீ கல்யாணம் பண்ணிக்கப் போறன்னு கேட்டாங்க. அது தனி கேட்டகிரி ஆஃப் ஆங்க்ஸைட்டி.’
‘கிளாஸிக் மிஸ்டேக்ஸ்… நம்ம ரூல்ஸ் என்ன? பத்து மணிக்கு முன்னாடி நோ சோஷியல் மீடியா. மண்டே அன்னிக்கு பேங்க் பேலன்ஸ் செக் பண்ணக்கூடாது.’
‘ஆனா இன்னிக்கு ட்யூஸ்டே ப்ரோ.’















Add Comment