Home » Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 13
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 13

முறைத்துப் பார்

அலுவலகத்தில் ஒரு மீட்டிங் வைத்தார்கள். மகளிர் தின விழாவை எப்படிப் புதுமையாகக் கொண்டாடலாம் என்பதுதான் அஜெண்டா. சீனியர் மேனேஜர் முதல் கடந்த வருடம் சேர்ந்த ஜூனியர் வரை எல்லாப் பெண்களும் ஒன்று கூடினோம்.

‘சின்ன விஷயமாக இருக்கும், ஆனால் திடீரென்றுதான் அவற்றைத் தெரிந்து கொண்டிருப்போம். அதுபோன்ற வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லலாம். பிறருக்கு உதவியாக இருக்கும்.’
‘நமக்கு உத்வேகம் தந்தப் பெண்களைப் பற்றிப் பேசிப் பதிவு செய்து, தொகுத்துப் போடலாம்.’
‘பெண்கள் என்று இல்லை, ஆண்களைப் பற்றிக் கூடப் பேசலாம்.’

இப்படியான யோசனைகள் வந்துகொண்டிருந்தன. சிலர் மட்டுமே பேசிக்கொண்டிருக்க, சீனியர் மேனேஜர் அமைதியாக அமர்ந்திருந்தவர்களைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினார். மேலும் நான்கைந்து பேர் பேசினர். ஏற்கெனவே வந்த யோசனைகள் நன்றாக இருப்பதாகச் சிலர் சொல்லினர். இடையே பட்டர் முறுக்கு, டீ, காபி எல்லாம் வந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!