பக்கவாட்டுப் பணிகள்
எங்கள் ஊரில் ஒரு போஸ்ட் மாஸ்டர் இருந்தார். அவர் வீட்டுத் திண்ணையில்தான் அலுவலகம். மேஜையின் ஓரத்தில் கார்டு, இன்லாண்டு கவர், கோந்துப் பசை இருக்கும். பின்னால் ஒயர்பின்னல் நாற்காலியில் அவர் அமர்ந்திருப்பார். மூன்றரை மணிக்குள் அலுவலகத்தை மூடி விடுவார்.
அவருக்கு எலக்ட்ரிக்கல் வேலைகளும் தெரியும். டியூப்லைட் எரியவில்லை, ஃபேன் ஓடவில்லை என்றால் அவரைத்தான் அழைப்போம். ஒயர் மாற்றுவது, தன்னிடமிருக்கும் பழைய டியூப்லைட்டைப் போடுவது என அதிகச் செலவு வைக்காமல் ரிப்பேர் செய்து விடுவார். அதற்குப் பதிலாக காபியோ, கொல்லையில் விளைந்த கத்திரிக்காயையோ கொடுப்போம்.
சரிசெய்ய முடியாதவற்றைப் பக்கத்து டவுனில் இருக்கும் எலக்ட்ரிக்கல் ஒர்க்ஸ் கடைக்கு எடுத்துப் போவார். சுற்றியிருக்கும் ஏழெட்டு கிராமங்களுக்கு அதுதான் ஒரே எலக்ட்ரிக்கல் ரிப்பேர் கடை. அவர் தொழில் கற்றுக் கொண்டதும் அங்குதான்.
ஒருநாள் போஸ்ட் மாஸ்டர், என் தந்தையிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். ‘சுப்பு அண்ணன் தன்னோட கடையிலேயே சேர்ந்துக்க சொல்றாரு. அவர் பசங்களெல்லாம் மெட்ராஸுக்கு படிக்கப் போயிட்டாங்க. நல்ல வேலை தெரிஞ்ச ஆள் இல்ல… சாயங்காலமா வர சொல்றார்.’














Add Comment