Home » Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 22
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 22

ஃபன்-பார்ட்னர்

பிரியாணி வேண்டுமா என்று உங்களைக் கேட்டு நாளாகிவிட்டது. இப்போதே பிணக்கைத் தீர்த்துக் கொள்வோம். ஒரு பிரியாணி சொல்லட்டுமா?

காபி மட்டும் காலை உணவு ஆகிவிடாது. உங்கள் டம்மியை யம்மியான உணவால் நிரப்புங்கள்

எங்களுக்கு ரொம்ப வருத்தம்பா… இவ்ளோ நாள் நல்லா பழகிட்டு நேரத்துக்கு ஆர்டர் பண்ணலன்னா எப்படி?

க்ர்ர்… க்ர்ர்… க்ர்ர்… உங்கள் வயிற்றிலிருந்துதான் சத்தம் வருகிறதா? ஏதாவது ஆர்டர் போடுகிறீர்களா?

படித்தவுடனே சிறு புன்னகையை மலரச்செய்யும் வாசகங்கள், Zomotoக்கான தனி அடையாளம். ஸொமேட்டோ முதலில் உணவகங்களை மதிப்பிடும் தளமாகத்தான் தொடங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டிலிருந்து உணவு டெலிவரியைத் தொடங்கிய ஸொமேட்டோ, தங்களுடைய முதன்மை வாடிக்கையாளர்கள் இளைஞர்கள்தான் என்று முடிவு செய்திருந்தது.

பிரபலங்கள், ஸொமாட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்ததைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்தல், ஸொமேட்டோ ஸ்டிக்கர்கள், மீம் உருவாக்கம், கட்-அவுட்களில் ஒரு வரி பஞ்ச் வசனங்கள் என எல்லா வகையிலும் இளைஞர்களைக் குறிவைத்தே தனது மார்க்கெட்டிங் சூத்திரங்களை வகுத்துக் கொண்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!